முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை!-பயனாளிகளுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!- விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கின் கள நிலவரம்.

பயனாளிகளுக்கு பாடம் எடுத்த திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசுமுறை பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

இதையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுய உதவி குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சி அண்ணா விளையாட்டரங்கு மைதானத்தில் நாளை (29.12.2022) காலை 9 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற இருக்கிறது.

இந்நிலையில் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை பணிகள் மும்முரமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

நாளை (29.12.2022) காலை இவ்விழாவில் பங்கேற்கவிருக்கும் பயனாளிகளுக்கும் மற்றும் துறைச் சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் இவ்விழா நிகழ்ச்சி நிரல் குறித்து விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (28.12.2022) காலை 9.15 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் விரிவான விளக்கம் அளித்தார்,

விழாவில் பங்கேற்க எந்த வழியாக உள்ளே வர வேண்டும், எந்த வழியாக வெளியே செல்ல வேண்டும். மேடைக்கு சென்று முதலமைச்சரிடம் நல திட்ட உதவிகள் மற்றும் காசோலைகள் பெறும் பயனாளிகள் எங்கு அமர வேண்டும். மற்ற பயனாளிகள் எங்கு அமர வேண்டும் என்று கிட்டத்தட்ட பாடமே நடத்தி முடித்ததோடு, விழாவிற்கு நாளை (29.12.2022) காலை 8 மணிக்கே வந்து விட வேண்டும் என்று பயனாளிகளுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் வாய்மொழி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பிரமாண்டமான அரசு விழாவில் எந்த குழப்பமும், குளறுபடிகளும் நடந்துவிட கூடாது என்பதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறார் என்பது இன்று காலை நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் நம்மால் கண்கூடாக உணர முடிந்தது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/12/18/81780/

Leave a Reply