ஐபிஎஸ், தபால், ரயில்வே கணக்கு, வருவாய் மற்றும் ரேடியோ ஒழுங்குமுறை சேவை துறைகளின் அதிகாரிகளும், பயிற்சி அதிகாரிகளும் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு.

இந்திய காவல் பணி, தபால், ரயில்வே கணக்கு, வருவாய் மற்றும் ரேடியோ ஒழுங்குமுறை சேவை துறைகளின்   அதிகாரிகளும், பயிற்சி அதிகாரிகளும்  இன்று (07.12.2022) குடியரசுத்தலைவர் மாளிகைளில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை  சந்தித்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பேசிய குடியரசுத்தலைவர், “நீங்கள் அதிக பொறுப்புகளைக் கொண்டப் பதவியை ஏற்றுள்ளீர்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களின் ஆற்றல் மீது அதிக நம்பிக்கை அரசுக்கு உள்ளது. அதன் மூலம் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.  உங்களது துறைகளில்  மக்கள்நலன் சார்ந்தத் திட்டங்களுக்கு சிறப்பான கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டும். உங்களுடைய இலக்குகள் மற்றும் செயல்பாடுகளில் தெளிவான பார்வை வேண்டும். உங்களுடைய இலக்குகளையும், செயல்பாடுகளையும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் அமையவேண்டும்.”

“இன்றைய தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில், ஆட்சி மற்றும் நிர்வாகத் துறைகளில் புத்தாக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கு மிகப் பெரிய அளவில் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்துவதன் விளைவாக, அரசு நிர்வாகம் வேகமாகவும், வெளிப்படையாகவும், மக்கள் நலன்சார்ந்ததாகவும், சிறப்பானதாகவும் அமையும்.”

அப்போது பயிற்சி அதிகாரிகளிடம் பேசிய குடியரசுத்தலைவர், “உங்களுடைய பணி இரண்டு நிலைகளில் இருந்து செயல்படும் படியாக அமைந்துள்ளது. அதாவது, முறையாக வரி செலுத்துபவர்களுக்கு வேண்டிய தேவைகளை ஏற்படுத்துவது, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது போன்ற இரண்டு முக்கியப் பணிகளை நீங்கள்  திறன்பட மேற்கொள்ள வேண்டும்.  வரி செலுத்துபவர்களுடனான அனைத்து தகவல் பறிமாற்றங்களும் கண்ணியமிக்கதாக இருப்பதோடு, அவர்கள் தாங்களாகவே, முன்வந்து வரி செலுத்த வேண்டும். வரி ஏய்ப்பு செய்பவர்களுடன் நேரடியாக  சந்திக்காமல், அமைப்பு ரீதியில் சந்திக்கும் திட்டமானது, அரசு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை விளக்குகின்றது. இத்தகையை நடவடிக்கைகளுக்கு உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.”

இந்திய ரேடியோ ஒழுங்குமுறை சேவைத்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிப் பேசிய குடியரசுத்தலைவர்,“ இந்த சேவைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபகாலமாக இந்த சேவைத்துறை அதிகளவில் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம், அலைக்கற்றை ஏலம் மற்றும் இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது போன்றவைகள் இந்தத் துறையின் முக்கியப் பொறுப்புகளாகும். தகவல் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை புத்தாக்க சிந்தனைகளுடன் கூடிய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.”

“ஏழை, எளிய மக்கள் நலன்களில் அதிக அக்கறை கொள்ளவேண்டும். சமூக நீதி அடிப்படையிலான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கான காரணிகளாக அரசு ஊழியர்கள் இருக்கவேண்டும். தேசத்தின் மீது அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டும்.”

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply