11.66% அதிகரிப்புடன் நவம்பரில் மொத்த நிலக்கரி உற்பத்தி 75.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2021 நவம்பரில் 67.94  மில்லியன் டன்னாக இருந்ததுடன் ஒப்பிடும்போது, 2022 நவம்பரில்  11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக இருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி 2022 நவம்பரில் இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, அதேசமயம் சிங்கரேணி கூலரீஸ் கம்பெனி நிறுவனமும்  மற்ற சுரங்கங்களும் முறையே 7.84% ,  6.87% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

நிலக்கரி உற்பத்தியில் முதன்மையான  37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.

 மின்சார உற்பத்திப் பயபாட்டுக்கு அனுப்பப்படுவதில்  கடந்த ஆண்டு 60.20 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும் போது, நவம்பர் 2022ல்  3.55% அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது நவம்பர் 2022ல் 16.28% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் நவம்பர் 2021ல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட நவம்பர் 2022ல் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 14.63% அதிகமாக உள்ளது.

திவாஹர்

Leave a Reply