மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்குகிறது.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊக்கமருந்து இல்லாத இந்திய விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி  கூறியுள்ளார்.  

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை புதுதில்லியில் இன்று மாநாடு ஒன்று நடத்தியது. இதில் இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு பேசிய விளையாட்டுத்துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் கேலோ இந்தியா உள்ளிட்ட விளையாட்டு போட்டி, தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்திய விளையாட்டு துறைக்கு மிக சிறந்த நேரம் என்றும் கூறினார். விளையாட்டுகளின் முன்னேறும் அதே நேரத்தில், ஊக்கமருந்து எதிர்ப்பையும் நாம் புறக்கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். அதை நோக்கியே தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தலைமை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான திருமதி ரித்து செயின் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கருத்தில் கொண்டும் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும் என்றார். ஊக்கமருந்து தடுப்பு தரநிலைக்கேற்ப மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து  தடுப்பு முகமை செயலாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளில் தடை செய்யப்பட்ட  அம்சங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையிலும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செயலி ஒன்றை உருவாக்கி வருவதாகவும் திருமதி ரித்து செயின் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply