மொரிஷியஸ், தான்சானியா, ஜிம்பாப்வே மற்றும் கானா நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சு நடத்திய தர்மேந்திர பிரதான் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு கேட்டு கொண்டார்.

மொரிஷியஸ், தான்சானியா, ஜிம்பாப்வே மற்றும் கானா நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களுடன் புதுதில்லியில் இன்று இருதரப்பு பேச்சு நடத்திய தர்மேந்திர பிரதான் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு கேட்டு கொண்டார்.

இக்கூட்டத்தில் மொரிஷியஸ் துணைப்பிரதமரும், கல்வித்துறை அமைச்சருமான திருமதி.லீலா தேவி தூக்குன்-லுச்சுமுனை சந்தித்த திரு.பிரதான், கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மொரிஷீயசுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு தேவையான உதவிகளை அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

தான்சானியா கல்வித்துறை அமைச்சர் திருமதி.லீலா முகமது மூசாவுடன் உரையாடிய திரு.பிரதான், ஐஐடி திட்டத்துடன் தான்சானியாவுக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். ஆஃப்ரிக்காவில் தொழில்நுட்ப கல்விக்கான கேந்திரமாக தான்சானியா விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஜிம்பாப்வே கல்வித்துறை அமைச்சருடன் பேசிய திரு.பிரதான், திரு.ரேமூர் மச்சிங்குரா, இந்தியா ஜிம்பாப்வேயிடையே கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளுக்காக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

கானா கல்வித்துறை அமைச்சருடன் உரையாடிய திரு.பிரதான், இந்தியா – கானா இடையே மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பரஸ்பரம் முன்னுரிமைகளை அடைய கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply