இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காதி இந்தியா அரங்கம் வெளிநாட்டு தூதர்களைக் கவர்ந்துள்ளது.

புதுதில்லியில் நடைபெற்று வரும் 41-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காதி இந்தியா அரங்கத்தை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் திருமதி எச் இ பட்டரத் ஹாங்டாங், இந்தியாவுக்கான ஓமன் தூதர் திரு இசா அல்ஷிபானி ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு காதிப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில், காதி உடையில் காட்சியளிக்கும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் திரு நரேந்திர  மோடியின் உருவப்படங்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்தியாவிற்கான தூதர்களை  காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் விளம்பர பிரிவு இயக்குநர் சஞ்சீவ் போஸ்வால் வரவேற்றார்.   இவ்விரு தூதர்களும் காதிப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் இந்திய அரசின் முயற்சியைப் பாராட்டினர். இதைத் தொடர்ந்து காதி அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மண்பானைத் தயாரிப்பு, அகர்பத்தி தயாரிப்பு, ராட்டினத்தில் நூல் நூற்பது ஆகியவற்றை கண்டு ரசித்ததுடன் காதி கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆயத்த ஆடைகள், நகைகள், மூலிகை மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். அப்போது பேசிய இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர், காதிப்பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியில் இந்தியாவுடன் தாய்லாந்தும் இணைந்து செயல்படும் என உறுதி அளித்தார். காதி அரங்கத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் சேத் பார்வையிட்டு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply