என்டிபிசியின் செயல்பாடு, பணி கலாச்சாரம் மற்றும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது: மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.

என்டிபிசியின் செயல்பாடு, பணி கலாச்சாரம் மற்றும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது. கடினமான காலங்களில் கூட மின்சார நெருக்கடியை நாங்கள் அனுமதிக்கவில்லை என்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல  எரிசக்தித் துறை அமைச்சர் திரு  ஆர் கே சிங், என்டிபிசியின் 48வது அமைப்பு தின விழாவில் பாராட்டு தெரிவித்தார்.

புது தில்லியின் சிரி கோட்டையில் நடைபெற்ற என்டிபிசியின் அமைப்பு தின விழாவில்  என்டிபிசியின் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பிரமுகர்களிடையே திரு சிங் பேசினார்.

எரிசக்தி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்த முடியாது என்பதைத் தமது உரையில் வலியுறுத்திய திரு சிங், எரிசக்திக்கான தேவை அதி வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக நாம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். முக்கியமான முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய  திரு சிங், பிரகாசமான மற்றும் இளம் மனங்களை  ஈர்த்து, காலத்துக்கேற்ப சிந்திக்கவும்  கடுமையான பணியை ஏற்கவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய என்டிபிசி தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு குர்தீப் சிங், “நாம்  1975-ல் நமது பயணத்தைத் தொடங்கினோம். இந்த 47 ஆண்டுகளில் நாம் ஒரு வெற்றிகரமான பயணத்தை முடித்துள்ளோம். நமது வளர்ச்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி ” என்றார்.

இவ்விழாவில் மின்சாரம் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சர் திரு க்ரிஷன் பால், மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply