உத்தரப்பிரதேசத்தின் ஒரு மக்களவை தொகுதி, ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உ.பி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

உத்தரப்பிரதேசத்தின் மைன்புரி மக்களவை தொகுதி, ஒடிசாவின் பதாம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷாகர், பீகார் மாநிலம் குர்ஹானி, உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர், சத்தீஸ்கரின் பானுபிரதாப்நகர் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான அட்டவனை வருமாறு;

தேர்தல் அறிவிக்கை வெளியீடு; நவம்பர் 10

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்; நவம்பர் 17

வேட்புமனுக்கள் பரிசீலனை; நவம்பர் 18

மனுக்களை விலக்கிக்கொள்ள கடைசிநாள்; நவம்பர் 21

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்; டிசம்பர் 5

வாக்கு எண்ணிக்கை; டிசம்பர் 8

டிசம்பர் 10ந்தேதி இடைத்தேர்தல் நடைமுறைகள் நிறைவுபெறும்.

தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகள், அவை இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply