அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் !-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழகமெங்கும் ஏழை எளிய பொதுமக்கள் தங்களுடைய jiமருத்துவத்தை நோய்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , அரசு பொது மருத்துவமனைகளிலும் மேற்கொள்கிறார்கள் . நீரழிவு நோய் , இதயநோய் , ரத்தழுத்தம் , போன்றவற்றிக்கு ஏழை , எளிய மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர் .

தனியார் மருத்துவனைகளில் இவ்வகை நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களும் , மருந்து மாத்திரைகளும் விலை அதிகம் . பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஏழை , எளிய மக்களால் அவற்றை வாங்க இயலாது . இந்நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடும் இவர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பல்வேறு மருந்துகள் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை . அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் நீங்கள் வேண்டுமென்றால் வெளியில் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர் . அவ்வகை மருந்தின் விலை தனியார் மருந்தகங்களில் மிக அதிகமாக இருக்கிறது . அவற்றை பொது மக்களால் வாங்க இயலாமல் நோயுடம் போராடும் அவல நிலைதான் ஏற்படுகிறது . இலவசமாக மருத்துவம் பார்த்துகொள்ள வாய்பிருந்தும் அதனால் பயனில்லாமல் போவது கொடுமையிலும் , கொடுமை . விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை . நீரழிவு நோய் , ரத்தழுத்தம் , இதயநோய்கள் போற்றவற்றிகு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும் . ஆனால் ஒருசில மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் . இருந்த பொழுதிலும் அரசு மருத்துவனைகளின் நிர்வாகிகள் அலட்சியமாக இருப்பது , மிகவும் வருந்ததக்கது . அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் .

மருத்துவ உபகரணங்களும் , தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு , வழிவகை செய்ய வேண்டும் . மக்கள் உடல் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் .

முன்னெச்சரிக்கையாக தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் . ஆகவே மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான மருத்துவத்தை முழமையாக அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply