நிலக்கரி அமைச்சகம் சார்பாக இரண்டாவது கட்ட சிறப்பு தூய்மை பிரச்சாரம்.

அக்டோபர் 2 முதல் 31-ஆம் தேதி வரை இரண்டாவது கட்ட சிறப்பு தூய்மை பிரச்சாரத்தில் நிலக்கரி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் போது கள/ வெளியூர்களில் உள்ள அலுவலகங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் நிலக்கரி சுரங்கங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன்படி இது நாள் வரை சுமார் 1949224 சதுர அடி இடம் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதோடு, 3644.34 மெட்ரிக் டன் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதன் மூலம் ரூ. 18.546 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது போன்ற கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்திய இடம் கூடுதல் வாகன நிறுத்தம், சேமிப்பு கிடங்குகள், அகலமான பாதைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே நேற்று (அக்டோபர் 28, 2022) நிலக்கரி அமைச்சகம் நடத்திய ரத்ததான முகாமில் ஏராளமான ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர்.

எம். பிரபாகரன்

Leave a Reply