இந்தியா –ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு உயர்நிலை கூட்டு நடவடிக்கைக் குழுவின் 10 வது கூட்டத்திற்கு பியூஷ் கோயல் தலைமை வகித்தார்.

இந்தியா –ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு உயர்நிலை கூட்டு நடவடிக்கைக் குழுவின் 10 வது கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்,  அபுதாபி அமீரக செயற்குழு உறுப்பினர் ஷேக் ஹமீத் பின் சையத் அல் நஹியான் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.

இந்திய –ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்த கடந்த 2013ம் ஆண்டு கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா- ஐக்கிய அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பிறகு முதன் முறையாக இந்த கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நடைபெற்றது.  

இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் பேச்சுகளின் நிலை குறித்து இரு தரப்பு பிரதிநிதிகளும்  மறு ஆய்வு  செய்தனர். இக்கூட்டத்தில் பேசிய திரு பியூஷ்கோயல், உள்கட்டமைப்பு  மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய துறைகளில்  ஒத்துழைத்து செயல்படுவதற்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். கால நேரம் மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஒற்றை சாளர தீர்வுகள்  மற்றும் காணொலி வாயிலான வர்த்தக முனையங்களை உருவாக்குவதற்கான  வழிவகைகளை கண்டறிய இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளதாக கூறினார். ஐக்கிய-அரசு அமீரகத்தில் இந்திய தொழில் முனைவோர் மற்றும்  முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண  அங்கு அதிவிரைவு தீர்வு காணும் அமைப்பு அமைக்கப்படும் என்று பியூஷ்கோயல் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply