அக்டோபரில் சட்டசபை கூட்டத்தொடர்: அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில், இன்று (செப்.,26) காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply