மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!-தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

தமிழ்நாடு வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (26-9-2022) வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தழுவிய அளவில் மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 1-12-2019 நாள் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்குவது, மின்வாரிய ஆணை (2) ரத்து செய்வது, ஐம்பதாயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, பணி ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்ந்த கூடாது.துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின்வாரிய தொழிற்சங்கங்கள் முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே,முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்,அப்பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆகவே,தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மின்வாரிய தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மின்வாரிய தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்,பொது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தடங்கள் ஏற்படும். அது தமிழ்நாடு அரசை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நிலை ஏற்படும்.

ஆகவே தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் முன்வைத்துள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply