குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர் வரும் 11 ஆம் தேதி பதவியேற்கிறார்.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்தீப் தன்கர் வரும் 11-ம் தேதி பதவியேற்கிறார்.நேற்று நடைபெற்ற இதற்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், போட்டியிட்ட வேட்பாளர் மார்கரெட் ஆல்வா-வைவிட 346 வாக்குகள் கூடுதலாக பெற்று திரு ஜக்தீப் தன்கர் வெற்றிபெற்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இத்தகவலை தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அலுவலரும், மக்களவை செயலருமான திரு உத்பல் குமார் சிங், 780 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், திரு ஜக்தீப் தன்கர் 528 வாக்குகளும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றதாக தெரிவித்தார்.15 வாக்குகள் செல்லாதவையாக இருந்ததாகவும் அவர் கூறினார். திரு. ஜக்தீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்துள்ள ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்ற வழக்கறிராகவும் பணியாற்றியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply