வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துமாறு மக்களை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.

வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துமாறு மக்களை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவர்களின் போற்றத்தக்க துணிவையும், முயற்சிகளையும் நினைவு கூர்ந்துள்ளார். நமது மூவண்ணக்கொடியோடு தொடர்புடைய குழு பற்றிய விவரங்கள், முதலாவது மூவண்ணக்கொடியை பண்டித நேரு பறக்கவிட்டது உள்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

1947-ம் ஆண்டு இதே நாளில் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நமது வரலாற்றில் ஜூலை 22 தனிச்சிறப்பு உடையதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:-

“சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை இந்த ஆண்டு நாம் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13-க்கும், 15-க்கும் இடையே உங்களின் வீடுகளில் மூவண்ணக்கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும்”

“ஜூலை 22 ஆகிய இன்றைய தினம் நமது வரலாற்றில் தனிச்சிறப்பு உடையதாகும். 1947-ம் ஆண்டு இதே நாளில் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவண்ணக்கொடியோடு தொடர்புடைய குழு பற்றிய விவரங்கள், முதலாவது மூவண்ணக்கொடியை பண்டித நேரு பறக்கவிட்டது உள்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளேன்.”

“காலனி ஆட்சியை எதிர்த்து நாம் போராடிய போது சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவர்களின் போற்றத்தக்க துணிவையும், முயற்சிகளையும் இன்று நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்யவும், அவர்கள் கனவுகண்ட இந்தியாவை கட்டமைக்கவும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply