இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக இருந்த எம்.பி. கிறிஸ் பின்சர், கடந்த புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியின் எம்பி. பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

திவாஹர்

Leave a Reply