ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1150-ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்தன. பக்திகா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 1,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,150 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 1,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply