துபாய் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபர்களிடமிருந்து ரூ63.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 974.5 கிராம் தங்கம் பறிமுதல்!

file photo

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. துபாய் சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.

இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply