தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து உற்சாகத்துடன் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள்!

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துைற உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்கு வரத்தை தொடங்கி வைத்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply