இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இன்ஜின்களை 2021-22 நிதியாண்டில் பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் உற்பத்தி செய்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான இன்ஜின்களை 2021-22 நிதியாண்டில் தயாரித்து பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மொசாம்பிக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 4 இன்ஜின்கள் உட்பட மொத்தம் 367 இன்ஜின்கள் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது, இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த 367 இன்ஜின்களில் பயணிகள் இன்ஜின் மொத்தம் 31, சரக்கு இன்ஜின் மொத்தம் 332 மற்றும் மொசாம்பிக்கிற்கு 04 இன்ஜின்கள் அடங்கும்.

2021-22 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட லோகோக்களிலிருந்து 60.68 கோடிகளையும், 2011 முதல் மொத்தம் 704 கோடிகளையும், 2011 முதல் இன்றுவரை ரயில்வே அல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து 1837 கோடிகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

2021-22-ம் ஆண்டில், ஏற்றுமதி செய்யப்பட்ட இன்ஜின் உதிரிபாகங்கள் மூலம் 6.09 கோடி வருவாயை பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஈட்டியுள்ளது. 2020-21-ல் இது 1.08 கோடியாக இருந்த நிலையில், முந்தைய ஆண்டை விட 464 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல், ரயில் இன்ஜின் உதிரிபாகங்கள் மூலம் ரயில்வே அல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற வருவாய் 16.4 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டின் 8.29 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 98.6 சதவீதம் அதிகமாகும்.

திவாஹர்

Leave a Reply