மத்திய எஃகு அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங்கை பல்வேறு பிரதிநிதிகள் ஜம்முவில் சந்தித்தனர்.

மத்திய எஃகு அமைச்சர் ஸ்ரீ ராம் சந்திர பிரசாத் சிங், தமது ஜம்மு பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று பல்வேறு பிரதிநிதிகளை சந்தித்தார். மேயர் சந்தர் மோகன் குப்தா தலைமையிலான ஜம்மு மாநகராட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில், நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற தொழில்களின் வளர்ச்சிக்கு தாய் தொழிலை அமைப்பது, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிலாளர் பிரச்சினைகள், ஜிஎஸ்டி குறைப்பு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகள் உள்ளிட்டவற்றை அமைத்தல், ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளை தொழில் மற்றும் வர்த்தக சபை முன்வைத்தது.

விடுதிகள் மற்றும் உணவகங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் அத்தொழிலுக்கான ஊக்கத் தொகுப்பு, பதிவு விதிகள் மற்றும் உரிமையாளர் கட்டணங்களில் தளர்வு ஆகியவற்றை கோரினர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply