மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு பிரதமர் பாராட்டு.

The Prime Minister, Shri Narendra Modi has lauded the Government’s landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. 

In a series of tweets, the Prime Minister said; 

“Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. 

This will immensely help thousands of our youth every year get better opportunities and create a new paradigm of social justice in our country.

xxxxxxxxxx

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் மைல்கல் முடிவை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

தொடர் சுட்டுரைச் செய்திகளில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மைல்கல் முடிவை நமது அரசு எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நம் நாட்டில் சமூக நீதிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்கவும் இது பெருமளவு உதவிகரமாக இருக்கும்.”

திவாஹர்.

Leave a Reply