சீன தாக்குதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர்? எத்தனை பேர் காயம் அடைந்தனர்? எத்தனை வீரர்களை காணவில்லை?- என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்! -காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.

Smt._Sonia_Gandhi_17-06-2020

சீன ராணுவம், கடந்த, இரண்டு மாதமாகவே, லடாக் எல்லையில் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவம் நடத்திய அத்துமீறலால், மக்களிடம் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தினர், 20 பேர் செய்து உள்ள உயிர் தியாகம், 130 கோடிக்கும் அதிகமான மக்களிடம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எத்தனை வீரர்கள் இறந்தனர்? எத்தனை பேர் காயம் அடைந்தனர்? எத்தனை வீரர்களை காணவில்லை? என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்.

மேலும், இந்திய பகுதியில், சீனா எவ்வளவு துாரம் ஆக்கிரமித்துள்ளது? எப்படி ஆக்கிரமித்தது? என்பதையும் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். இந்நிலைமையை எதிர்கொள்ள, அரசிடம் உள்ள திட்டம் பற்றியும் தெரிவிக்க வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், இந்திய ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் எப்போதும் இருக்கும்.

இந்த சவாலான நேரத்தில், எதிரியை எதிர்கொள்ள, ஒட்டு மொத்த நாடும், ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

-Dr.DURAI BENJAMIN.
ullatchithagaval@gmail.com

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ் காணும் இணைப்பை க்ளிக் செய்யவும்

http://www.ullatchithagaval.com/2020/06/02/48306/

One Response

  1. MANIMARAN June 18, 2020 6:42 pm

Leave a Reply