கடுமையாகும் ஊரடங்கு உத்தரவு!-தமிழகம் முழுவதும் விலையில்லா முக கவசங்கள் வழங்க அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை இலவசமாக வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளில் 2,08,23,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13,48,31,798 விலையில்லா முக கவசங்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபருக்கு தலா இரண்டு முக கவசங்கள் வீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மிக கடுமையாகும் சூழல் உருவாகியுள்ளது. முக கவசம் இல்லாமல் யாரும் வீதியில் நடமாடக் கூடாது என்ற உத்தரவை கடுமையாக்கினால் மட்டும்தான் சமூகத் தொற்றை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், ‘தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதையாக மாறிவிடும்’.

குறிப்பாக மது விற்பனையை தமிழக அரசு மறுப்பரிசீலனை செய்ய வேண்டும். மது போதையில் தன்னிலை மறந்து ஆங்காங்கே சாலை ஓரங்களில் விழுந்துக்கிடக்கும் மது நோயாளிகளால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவும் ஆபத்து உள்ளது. நோய் தொற்று பரவும் இந்த பேரிடர் காலத்தில் மக்களின் உயிருக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com

Leave a Reply