திருச்சி, அரியமங்கலம் காவல் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயற்சி!-உதவி காவல் ஆணையர் தலைமையில் விசாரணை.

திருச்சி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையத்தில், ஒரு தலைபட்சமாக விசாரணை என கூறி, திருநங்கை ஒருவர் அரியமங்கலம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் விசாரணை மேற்கொண்டதில், அரியமங்கலம் மலை அடிவாரப் பகுதியில் குடியிருந்து வரும் ரம்யா என்ற திருநங்கையின் தம்பி அழகுராஜ் என்பவரை, குற்றப்பின்னனிக் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்வரின் நண்பர்கள் 4 நாட்களுக்கு முன்பு மிரட்டி அடித்துள்ளனர்.

இதுசம்மந்தமாக திருநங்கை ரம்யா தம்பி அழகுராஜ் அரியமங்கலம் காவல் நிலையத்தில் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் குறிப்பிட்டுள்ள குற்றப்பின்னனிக் கொண்ட இஸ்மாயில் நண்பர்கள் தலைமறைவாகிவிட, உடனே அரியமங்கலம் போலிசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அந்த புகார் தொடர்பான விசாரணைக்காக இன்று அரியமங்கலம் காவல் நிலையம் வந்த திருநங்கை ரம்யா, இன்று மாலை 5.10 மணியளவில் தனக்கு நியாயம் மறுக்கப்படுவதாக கூறி, ஏற்கனவே தயாராகக் பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை காவல் நிலையம் முன்பு நின்று தலையில் ஊற்றினார்.

அதற்குள் அருகிலிருந்த அவரது உறவினர்களும், போலிசாரும், அவரை பத்திரமாகப் பிடித்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இந்நிலையில் புகாரில் குறிப்பிட்டுள்ள ஒரு நபரை அரியமங்கலம் போலிசார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply