பெண் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டாரா?-கொரோனா பரிசோதனை குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன?-முழுமையான வீடியோப் பதிவு.

President Trump Delivers Remarks on Testing

NEXT: President Trump and Administration officials deliver remarks and hold a press briefing on testing.

Posted by The White House on Monday, 11 May 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் பரிசோதனை குறித்த விபரங்களை வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 314,000 அமெரிக்கர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் நிறைவடைந்துள்ளன. உலகில் இதுவரை எங்கும் இல்லாத அளவிற்கு இந்த எண்ணிக்கை விரைவில் 10 மில்லியனைத் தாண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு 92 அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களை வழங்கியுள்ளது. எச் 1 என் 1, ஏவியன் காய்ச்சல், மெர்ஸ், எபோலா, என்டோரோ வைரஸ் மற்றும் ஜிகா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ரோச், லேப்கார்ப், அபோட் லேப்ஸ் மற்றும் பல நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சோதனைகளுக்கு எஃப்.டி.ஏவின் விரைவான அங்கீகாரம், அமெரிக்காவின் சோதனை வேகத்தையும், திறனையும் பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்த முயற்சிகள் அமெரிக்கர்களுக்கு ஐந்து நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகளைப் பெற அனுமதித்தன. 

புதிய ஆன்டிபாடி சோதனைகள், ஆன்டிஜென் சோதனைகள், பாயிண்ட்-ஆஃப்-கேர் நியூக்ளிக் அமில சோதனை மற்றும் மரபணு வரிசைமுறை தொழில்நுட்பங்கள் ஆகியவை வளர்ச்சியில் உள்ளன. இது எங்கள் ”கொரோனா வைரஸ்” கண்காணிப்பு முயற்சிகளை மேம்படுத்தும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் வெய்ஜியா ஜியாங் என்ற பெண் செய்தியாளர், அமெரிக்கர்கள் அன்றாடம் தங்கள் உயிரை இன்னும் இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு நாளும் அதிகமான பாதிப்புகளை நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு ஏன் உலகளாவிய போட்டியாக இது தெரிகிறது? என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

பெண் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‛உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. என்னிடம் கேட்க வேண்டாம். சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள்’ என்றார்.

சார், நீங்கள் ஏன் என்னிடம், குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்? என பெண் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங் மறுபடியும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ‛மோசமான கேள்வி கேட்கும் எவருக்கும் அவ்வாறு தான் கூறுவேன்,’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

‛இது ஒரு மோசமான கேள்வி அல்ல,’ என பெண் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங்  கூறினார்.

உடனே ‛பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என சொல்லிவிட்டு டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சீனாவில் பிறந்து தனக்கு 2 வயதான போது, குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவர் இந்த பெண் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2015 முதல் ‘சி.பி.எஸ் நியூஸ்’ பிரிவில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

இப்போது புரிகிறதா? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோபத்திற்கு என்ன காரணமென்று?!

-Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

 

 

 

Leave a Reply