ஏற்காட்டில் ”கொரோனா” பரவல் தடுப்பு நடவடிக்கை உத்தரவுகளை மதிக்காத காய்கறி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கார் நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தை.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கினால், ஏற்காடு டவுன் பகுதியில் செயல்பட்டு வந்த அனைத்து காய்கறி கடைகளும், காந்தி பூங்காவிற்குள் மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், அங்கு மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், தற்காலிக காய்கறி சந்தை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டு, நேற்று முன்தினம் முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த இடம் சற்று பெரிதாக இருப்பதால், மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் கார் நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், ஏற்காடு அண்ணா பூங்கா வாயிலில் இரு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை இட மாற்றம் செய்வதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தங்களுக்கு ஒரு விதிமுறை, இந்த இரு கடைகளுக்கு மட்டும் ஒரு விதிமுறையா? என மற்ற காய்கறி கடைகாரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், அந்த இரு கடைகளையும் கார் நிறுத்துமிடத்திற்கு மாற்ற வேண்டும் என, ஏற்காடு பி.டி.ஓ.விற்கு, ஏற்காடு டவுன் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி கடிதம் எழுதியுள்ளார்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply