மூன்று நிறத்தில் அனுமதி அட்டை!- வாரத்தில் 2 நாட்கள் ஒருவர் மட்டுமே வெளியில் வர அனுமதி!- “கொரோனா நோய்” தடுப்பு பணி தீவிரம்.

கொரோனா நோய்” தடுப்பு பணியை சிறப்பாக செயல்படுத்துகிற ஊராட்சி நிர்வாகத்திற்கு, மாவட்ட  ஆட்சித்தலைவர் கையில் விருது வழங்கப்படுமென, திருவெறும்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் இன்று காலை நடைப்பெற்ற திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட  ஊராட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு, திருவெறும்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது. ஆனால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வாரத்தில் 2 நாட்கள் வெளியில் வருவதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணத்தில் ரோஸ், வெளிர் ஊதா, மற்றும் மஞ்சள் நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இதில் திருவெறும்பூர் துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கையெழுத்து இடம்பெறும்.

அந்த அந்த ஊராட்சிகளில் உள்ளவர்களை மூன்றாக பிரித்து அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். ரோஸ் நிற அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமையும், வெளிர் ஊதா நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமையும், மஞ்சள் நிற அட்டை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையும். வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரலாம். ஞாயிற்றுகிழமை யாரும் வெளியே வர அனுமதி கிடையாது.

அனுமதி அட்டை வைத்திருப்பவர் ஒருவர் மட்டும் தான் பொருட்கள் வாங்க வெளியே வர வேண்டும்15 வயது முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே வெளியே வர அனுமதி. காலை 6:00-மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே அனுமதி.

அனைத்து அனுமதி அட்டைகளையும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் ஊர் பொது மக்களுக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பார்கள்.

இந்த அனுமதி அட்டையுடன் வெளியில் வருபவர்கள்  வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். மேலும், அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு திருவெறும்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

-ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN April 8, 2020 6:52 pm

Leave a Reply