மலேசியாவில் “கொரோனா வைரஸ்” தொற்றுக்கு இதுவரை 61 பேர் பலி!- இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மலேசியா சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா.

Sidang Media: Perkembangan COVID-19 Di Malaysia

Sidang media oleh YBhg. Datuk Dr Noorhisham Abdullah, Ketua Pengarah Kesihatan Malaysia berkenaan perkembangan terkini COVID-19 di Malaysia

Posted by KEMENTERIAN KESIHATAN MALAYSIA on Sunday, 5 April 2020

Summary of Covid-19 Cases in Malaysia as at 12:00pm, April 5th, 2020

Positive-  தொற்று உள்ளவர்கள்
   3662
Negative-தொற்று இல்லாதவர்கள் 39877
Pending-காத்திருப்பில் உள்ளவர்கள்
  8398
TOTAL 51937

 

Number of Discharged-டிஸ்சார்ஜ் 1005
Number in ICU -அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள்     99
Number of Death- இறந்தவர்களின் எண்ணிக்கை
     61

மலேசியாவில் ஜனவரி 10 ஆம் தேதி முதல், ஜனவரி 28 ஆம் தேதி வரை 78 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 36 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 39 பேர் மலேசியர்கள், இதில் ஜோர்டான், பிரேசில், தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் மலேசிய சுகாதார அமைச்சக அதிகாரிகளால் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 மணி நிலவரப்படி, மலேசியாவில் 7 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பதாக மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ஜனவரி 29-ஆம் தேதி 7 பேராக இருந்த கொரோனா கிருமித் தொற்று, இன்று (05.04.2020) பிற்பகல் 12 மணி நிலவரப்படி அது 3,662 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் தற்போதைய நிலவரப்படி 3 கோடியே 22 லட்சத்து 67 ஆயிரத்து 808 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும், இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கொண்ட நாடாக விளங்குகிறது.

3 கோடியே 22 லட்சத்து 67 ஆயிரத்து 808 மக்கள் வசிக்கும் மலேசியாவில் “கொரோனா வைரஸ்” தொற்று இத்தனை பாதிப்புகளை உருவாக்கியிருக்கிறது என்றால், இன்றைய நிலவரப்படி சுமார் 135 கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில் எத்தகைய பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்பதை நினக்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

நமது மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மதிக்காமல், சமூக இடவெளியை அனுசரிக்காமல், “கொரோனா கிருமி” தொற்று அறிகுறி உள்ளவர்கள் தானாக முன் வந்து மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் மற்றும் சமூக அக்கறையில்லாமல் தொடர்ந்து கண்டப்படி வெளியே சுற்றித்திரிந்தால் “கொரோனா வைரஸ்” தொற்றால் நாம் மிக பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிவரும்.

ஆம், நமது மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனைகளையும், உத்தரவுகளையும், நாம் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இந்தியாவில் இந்த “கொரோனா வைரஸ்” தொற்றால் இன்னும் 30 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.

யாரையும் அச்சுறுத்துவதற்காக இதை நான் இங்கு குறிப்பிடவில்லை. நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த நிதர்சனமான உண்மையை இங்கு பதிவு செய்துள்ளேன்.

கொரோனா கிருமித் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து, சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, உடனே அங்கிருந்து வெளியேறி ஹாங்காங், பேங்காக், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் மலேசியாவுக்கு சுற்றுலா பயணிகளைப்போல இடம் பெயர்ந்தனர். இப்படி இடம் பெயர்ந்தவர்களின் மூலமாகதான் இந்த கொரோனா கிருமித் தொற்று உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ளது.

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலுக்கு பிறகு, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் அனைவரும் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? என்ற விபரம் இதுவரைத் தெரியவில்லை. கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு குறித்தும், அதில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்தும், சீன அரசு சொல்லும் எண்ணிக்கையும், புள்ளிவிபரங்களும் முற்றிலும் போலியானவை. எனவே, சீன ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று வரை மர்மாகவே இருக்கிறது.

எனவே, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் முதல், மார்ச் மாதம் 10-ந்தேதி வரை, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்தவர்கள் எத்தனை பேர்? சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலா தலங்களுக்குதான் சென்றார்களா? (அல்லது) வேறு இடங்களுக்கு சென்றார்களா? அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்ற விபரத்தை போர்கால அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும்.

இதில் வெளியுறவு துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் இணைந்து ஒருவருக்கொருவர் உண்மை தகவல்களை பரிமாறிக் கொள்வதுடன், அதை நமது பாரத பிரதமரின் கவனத்திற்கும் உடனே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு போக முடியும்.

இந்த ஆபத்தான தருணத்தில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் உதவி எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட ஆயிர மடங்கு உளவுத்துறை மற்றும் காவல் துறையினரின் செயல்பாடு மிகவும் அவசியம்.

-Dr.DURAI BENJAMIN.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 6, 2020 9:44 pm

Leave a Reply