செவிலியர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 6 கொரோனா தொற்று நோயாளிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!-வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.

உத்ரபிரேதச மாநிலம், காஸியாபாத் மாவட்டம், காஸியாபாத் நகரில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்றுடன் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுருந்த 6 கொரோனா தொற்று நோயாளிகள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் ஆலோசனைக்கு ஒத்துழைக்காமல், ஆபாசமாகவும், ஒழுக்கக்கேடாகவும், அவர்களிடம் உள்ள நோய் தொற்றை செவிலியர்கள் மற்றும் மருத்து பணியாளர்களின் மீது பரப்பும் நோக்கத்துடன் அசட்டையாக செயல்பட்டதாக, அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் காவல் துறையில் அளித்த எழுப்பூர்வமான புகாரை அடுத்து, அந்த 6 கொரோனா தொற்று நோயாளிகள் மீதும், இந்திய தண்டணைச் சட்டம்

IPC 294- பொது இடங்களில் ஆபாச செயல்களில் ஈடுப்படுதல், ஆபாசமாக பேசுதல், ஆபாசமான பாடல் மற்றும் கதைகளை பேசுதல்.

IPC 354-பெண்களை மானபங்கம் செய்தல்/ தாக்குதல்.

IPC 269- தொற்று நோயில் அசட்டையாக இருத்தல்.

IPC 270- ஆபத்தான தொற்று நோயை பரப்புதல்.

IPC 271- ஒதுக்கு வைக்கும் விதிக்கு கீழ்படியாமை.

IPC 509- பெண்மை நலம் பழிக்கும் வகையில் சொல், செயல், சைகைகளில் ஈடுபடுதல் .

ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த 6 கொரோனா தொற்று நோயாளிகளையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

இந்த 6 பேரும் கடந்த மார்ச் 8, 10 தேதிகளில், டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மத பிரசங்க கூட்டத்தில் கலந்து கொண்டு, சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களால் அவர்கள் சார்ந்து இருக்கும் மத அமைப்பிற்கே அவபெயரை தேடி தந்துள்ளனர். எல்லா மதத்திலும், எல்லா இனத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு மிக பெரிய உதாரணம். எனவே, இவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply