திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இ – ரிக்ஷா சேவை!

800 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருச்சி NIT-தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ரிக்ஷா சேவையை NIT இயக்குனர் முனைவர். மினி ஷாஜி தாமஸ் துவக்கி வைத்தார். இம்முயற்சி கல்லூரி வளாகத்தை பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இவ்வாகனத்தில் 4 பேர் பயணிக்கலாம்.

இவை மின்சாரத்தை கொண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாகனம், கல்லூரி வளாகத்தின் முக்கிய பகுதிகளுக்கு மாணவர்களை கொண்டு சேர்க்கப்பயன்படும்.

Transvahan நிறுவனத்தினரால் இயக்கப்படும் வாகனத்தில் பயணிக்க மாணவர்கள் 10 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இப்பொழுது சோதனை முறையில் 3 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையில் இது மாணவர்களின் ஆதரவைப் பெறுமேயானால், இதன் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படும்.

இந்த சேவைக்கான பயணசீட்டை மாணவர்கள் காசில்லா பரிவர்த்தனை முறையிலும் பணம் செலுத்திப் பெறலாம்.

இவ்வாகனமானாது வளாகத்தின் 3 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவை பின்வருமாறு:

1)பிரதானநுழைவு

2)7ஆவது தெருமுனை 

3)மெகா  மெஸ்  எதிரில்.

இது மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN February 18, 2020 4:22 pm

Leave a Reply