சிலம்பத்தில் உலக சாதனை படைத்துவரும் ஆயுதப்படை காவலர்!

ஆயுதப்படை காவலர் அரவிந்த்.

தமிழர்களின் பாரம்பரிய பாதுகாப்பு கலையான சிலம்பத்தை சிறப்பிக்கும் வகையில் மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் மூன்று உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிலம்பம் சுற்றி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பெற்ற தமிழக காவலர் திரு. அரவிந்த்

சிலம்பம் சுற்றி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பெற்ற தமிழக காவலர் திரு. அரவிந்த் மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் திருச்சி மாநகர ஆயுதப்படை முதல் நிலை காவலர் அரவிந்த் மற்றும் மதுரையை சேர்ந்த ஜவகர் இருவரும் இணைந்து 30 மணி நேரம் முப்பது நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்தச் சாதனை பிப்ரவரி 1-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மறுநாள் மதியம் சுமார் 4 மணிக்கு நிறைவு பெற்றது. உலகச் சாதனை விதிமுறைப்படி இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை முயற்சியை டாக்டர் டிராகன் ஜெட்லீ அவர்கள் நேரில் ஆய்வு செய்து உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்து சாதனை சான்றிதழ் வழங்கினார்.#JetleeBooksOfRecords #TrichyCityPolice #WorldRecord #TNPolice #TruthAloneTriumphs

Posted by Tamil Nadu Police on Tuesday, 4 February 2020

இதில் முதல் சாதனையாக திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜவர் ஆகிய இருவரும் இணைந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 07:07 மணிக்கு தொடங்கி தொடர்ச்சியாக 30 மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். உலகசாதனை விதிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஓய்வு உண்டு. மொத்தத்தில் 2 மணி நேரம் ஓய்வு எடுத்து உள்ளனர்.

இரண்டாவது சாதனையாக திருச்சி சேர்ந்த ஆயுதப்படை காவலர் அரவிந்திடம் இலவசமாக சிலம்ப பயிற்சிப் பெற்ற 24 மாணவ, மாணவிகளும், மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 200 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஒரு கையில் சிலம்பத்தை சுற்றிக் கொண்டே மற்றொரு கையில் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் ஐந்து நிமிடத்தில் எழுதி சாதனை படைத்தனர்.

மூன்றாவது சாதனையாக 200 பேரும் இணைந்து சிலம்பத்தில் இரண்டு பக்கமும் வண்ண ரிப்பன்களை சுற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனைகள் அனைத்தும் கின்னஸ் சாதனை புத்தகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எவரெஸ்ட் உலக சாதனை புத்தகங்களுக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

ஜெட்லி உலக சாதனை புத்தகத்தில் ஜெட்லி அவர்கள் நேரில் ஆய்வு செய்து சாதனைச் சான்றிதழ் வழங்கினார்.

காவலர் அரவிந்த் தனது ஓய்வு நேரத்தில் தான் கற்ற சிலம்ப கலையை மாணவ-மாணவிகளுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN February 16, 2020 7:16 pm

Leave a Reply