“Mr.நிச் கார்வர் – Ms. நிச் கார்வர்”திறனாய்வுப் போட்டி! -திருச்சி தேசியக் கல்லூரியில் நடைப்பெற்றது.

நிச் கார்வர் (Niche Carver) என்பது பணிரெண்டாம் வகுப்பு பயில்வோருக்கான ஒரு சுயபரிசோதனை மற்றும் சுய திறமைகளை வளர்த்துக்கொள்ளும் பல போட்டிகளை உள்ளடக்கிய ஒரு களம். இதை திருச்சி தேசியக்கல்லூரி நிர்வாகமும் மற்றும் காவேரி திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கமும் இணைந்து 30-11-2019 மற்றும் 01-12-2019 அன்றும் வழங்கியது. இதை போராசிரியர். ரா. பஞ்சநாதன்  நடத்தினார். இதில் சுமார் 70-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் சுமார் 15 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முதல் நாள் 30-11-2019 அன்று முதலில் திறனாய்வு தேர்வு (Apptitude Test) நடத்தப்பட்டது. பின் அனைவருக்கும் பேச்சுப் போட்டியும் நடத்தி, இரண்டிலும் அதிக மதிப்பெண் பெற்ற 24 மாணவ, மாணவிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை (Achievers, Builders, Creators and Energisers) 4 குழுக்களாக பிரித்து, அவர்கள் அனைவருக்கும் கல்லூரியின் சில குறிப்பிட் இடங்களை அதற்கான சிறு குறிப்புகளை கொண்டு கண்டறியும் போட்டி, வலைப்பதிவு எழுதும் போட்டி, குழுவாக இயங்குதல், இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்கள் போல நடந்துகொள்ளும் போட்டி மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டது.

இதில் திருச்சி சமயபுரம் SRV உயர்நிலைப்பள்ளி மாணவன் ரா.சுபாஷ் “Mr.நிச் கார்வர்” ஆகவும், ஸ்ரீ ரெங்கா உயர்நிலைப்பள்ளி மாணவி வி.காயத்திரி “Ms.நிச் கார்வர்” ஆகவும் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூபாய். 2500/- ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதிக மதிப்பெண் பெற்று முதல் பள்ளியாக  தேர்வான  திருச்சி ஸ்ரீ ரெங்கா உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 5000/-மும், நினைவுப் பரிசும்,  இரண்டாம் பள்ளியாக தேர்வான SRV உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 3000/- மும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

-துரை திரவியம்.

Leave a Reply