நான் காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான வீரன்; இந்தியாவின் அர்ப்பணிப்பு மிக்க மகன்! உடனே புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்!-ராகுல் காந்தி உருக்கமான கடிதத்தின் உண்மை நகல்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியதாவது.

காங்கிரஸ் கட்சிக்கு சேவையாற்றுவது என்பது எனக்கு கௌரவம். இந்த கட்சியின் மதிப்பு மிக்க லட்சியங்கள் இந்த அழகான தேசத்தின் உயிர் ரத்த ஓட்டமாக சேவை ஆற்றியுள்ளது என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

இந்த நாட்டுக்கும் இந்த அமைப்புக்கும் நான் அபரிமிதமான அன்புக்கும் நன்றிக்கும் கடமைப்பட்டவன் என்ற முறையில், 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு,  இந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

பொறுப்புடைமை என்பது கட்சியின் வளர்ச்சிக்கு மிகமுக்கியம். இந்த காரணத்திற்காக தான் நான் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். கட்சியை மறுகட்டுமானம் செய்வதற்கு கடினமான முடிவுகள் தேவை. மேலும், 2019 தேர்தல் தோல்விகளுக்கு கணிசமான கட்சியின் தலைவராக பொறுப்பேற்க சிலரையும் பொறுப்பேற்க செய்ய வேண்டும். மற்றவர்கள் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறிவிட்டு கட்சியின் தலைவராக என்னுடைய பொறுப்பை நான் புறக்கணித்தால் அது நீதியாகாது. என்னுடைய சகாக்கள் பலர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை நான் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நம் கட்சிக்கு புதிய தலைமை வர வேண்டும் என்பது முக்கியம் என்ற வேளையில், நானே புதிய தலைவரையும் தேர்வு செய்வது சரியாகாது.

நம் கட்சிக்கு ஆழமான வரலாறும், பாரம்பரியமும் கவுரவமும் இருக்கின்றது என்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.  இந்திய தேசத்தின் மீது நமக்கு ஆழமான வரலாறும் பாரம்பரியமும்  உள்ளது. ஆகவே ,யார் நம்மை தைரியத்துடனும், அன்புடனும், நன்றியுடனும் நம்மை வழிநடத்துவார்கள் என்பதை கட்சி முடிவு செய்து தலைவரை தேர்ந்தெடுக்கட்டும், நான் ராஜினாமா செய்த உடனே, காங்கிரஸ் செயற்குழுவில் உள்ள என் சகாக்களிடம் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை தொடங்க நம்பகமான குழு ஒன்றை அமைப்பதே, கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு சிறந்த வழி முறையாகும் என்று குறிப்பிட்டேன். புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்புக்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கி இருக்கிறேன். ஆகவே, தடையற்ற மாற்றத்துக்கும் இந்த நடைமுறைக்கும் என் முழு ஆதரவை அர்ப்பணிக்கிறேன் . என்னுடைய போராட்டம் ஒருபோதும் வெறும் அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல, எனக்கு பாஜக மீது வெறுப்போ, கோபமோ இல்லை. ஆனால், என் உடலின் ஒவ்வொரு அணுவும் இயல்பாகவே பாஜகவின் இந்தியா என்ற கருத்தை எதிர்க்கிறது. ஏன் இந்த எதிர்ப்பு எழுகிறது என்றால், என்னுடைய இருப்பே இந்தியன் என்ற கருத்தில் வியாபித்திருக்கிறது. இது அவர்களுடைய கருத்து கருத்துடன் நேரடியாகவும் மோதல் கொள்கிறது. இது ஒன்றும் புதிய போர் அல்ல, இந்த போர் நம் மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவது தான்.

எங்கு அவர்கள்  வித்தியாசத்தை காண்கிறார்களோ நான் அங்கு ஒற்றுமை காண்கிறேன். எங்கு அவர்கள் வெறுப்பை காண்கிறார்களோ நான் அன்பை காண்கிறேன். அவர்கள் எதை கண்டு பயப்படுகிறார்களோ அதை நான் ஆரத்தழுவுகிறேன்.

இத்தகைய பரிவு எனதருமை கோடானகோடி என் சக குடிமக்களையும் வியாபித்திருக்கிறது. இந்தியா என்ற இந்தக் கருத்தைத்தான் நாம் தற்போது பாதுகாக்க வேண்டும். நம்முடைய நாடு மற்றும் அதன் கொண்டாடப்படும் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் நம் தேசத்தின் கட்டமைப்பை சிதைப்பதற்காக உருவாக்கப்படுவதாகும்.

நான் காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான வீரன். இந்தியாவின் அர்ப்பணிப்பு மிக்க மகன். ஆகவே, இந்தியாவை என் கடைசி மூச்சு உள்ளவரை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். நாம் தேர்தலை வலுவாகவும் மரியாதைக்குரிய வகையிலும் எதிர்கொண்டோம். நமது பிரச்சாரம் அனைத்தும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை அனைவருக்குமான மரியாதை அனைத்து மதங்கள் சமூகங்களுக்கான மரியாதை ஆகியவையாகவே இருந்தது.

பிரதமர், ஆர்எஸ்எஸ் மற்றும் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து நான் தனி மனிதனாக போராடினேன். நான் ஏன் போராடினேன் என்றால் நான் இந்தியாவை நேசிப்பவன் எந்த லட்சியங்கள் மீது இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதை காக்கவே நான் போராடினேன். சில நேரங்களில் நான் தனித்து விடப்பட்டேன். ஆனால், இதற்காக நான் பெருமைப்படுகிறேன். நம் தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின்    உணர்ச்சி மிகு பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு களிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இவர்கள் தான் எனக்கு அன்பையும் நாகரிகத்தையும் கற்றுக் கொடுத்தார்கள், சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு நாட்டின் நடுநிலையான அமைப்புகள் தேவை. நடுநிலையாளர்கள் ஊடக சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மை ஆகியவை இல்லாமல் ஒரு தேர்தல் நியாயமானதாக நடந்து இருக்க முடியாது.

அதே போல் ஒரு கட்சி மட்டும் நிதியாதாரங்களுடன் ஏகபோக உரிமையுடன் செயல்படுவதும் நியாயமானதாக இருக்க முடியாது. 2019 தேர்தலில் நாம் ஒரு அரசியல் கட்சியை எதிர் கொள்ளவில்லை, மாறாக இந்திய அரசு எந்திரத்தை முழுமையாக எதிர்கொண்டோம். இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் எதிர்க் கட்சிகளுக்கு எதிராக அணி வகுக்கப்பட்டனர். நம் நாட்டில் முன்பு கொண்டாடப்பட்ட அமைப்புகளின் நடுநிலைத் தன்மை என்பது இப்போது இல்லை என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கூறப்பட்ட குறிக்கோள்கள் அதாவது நாட்டின் மதிப்பு மிக்க அமைப்புகளை கைவசப்படுத்துவது என்பது தற்போது பூர்த்தியடைந்து விட்டது. நம் ஜனநாயகம் அடிப்படை அமைப்பிலேயே பலவீனப்படுத்தப்பட்டது இப்போது இருந்துதான் ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பது இனி வெறும் சடங்குதான் இத்தகைய அதிகாரப்பிடிப்பு இந்தியாவுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வன்முறையையும் வலியையும் ஏற்படுத்துவதாக முடியும். விவசாயிகள், வேலையற்ற இளைஞர் சமுதாயம், பெண்கள், பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் தான் அதிக துன்பத்தைச் சந்திக்க நேரிடும். நம் தேசத்தின் பொருளாதாரம் மற்றும் மரியாதை மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

பிரதமரின் வெற்றி என்பது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் பரப்பை மறுத்து விடாது. எந்த பெரிய பணமும் கடும் பிரச்சாரமும் உண்மையும் வெளிச்சத்தையும் மறைக்க முடியாது. நம் மதிப்பு மிக்க ஜனநாயக அமைப்புகளை மீண்டும் பெற அவை உறுப்பினர் புத்துயிர் பெற தேசம் ஒன்று படுவது அவசியம். இந்த உயிர்ப்பின் சாதனம் காங்கிரஸ் கட்சிதான். இதை சாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நேரடியாக தன்னைத்தானே மாற்றி அமைத்துக்கொள்வது அவசியம்.

இன்றைய தினம், பாஜக இந்திய மக்களின் குரல்கள் மிகவும் அமைப்பு ரீதியாக ஒடுக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையை இத்தகைய குறைகளை காப்பதாகவும், இந்தியா ஒருபோதும் எப்போதும் ஒற்றைக் குரலாக இருக்காது. இந்திய நாடு என்பது எப்போதும் குரல்களின் சங்கமம்தான். உதவி செய்வதுதான் பாரதமாதாவின் உண்மையான சாராம்சம். என்னை ஆதரித்த வெளிநாட்டு, உள்நாட்டு இந்திய உள்ளங்களுக்கு என் நன்றிகளை பதிவு செய்கிறேன் காங்கிரஸ் கட்சியில் லட்சியங்களுக்காக நான் நிச்சயம் கடைசி வரை போராடுவேன். என் சேவை எப்போது தேவைப்பட்டாலும் நான் கட்சிக்கு சேவையாற்ற காத்திருக்கிறேன் இந்தியாவில் சக்தி வாய்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வருபவர்கள் யாரும் அதைத் தியாகம் செய்ய மாட்டார்கள். நாமும் நம் அதிகாரத்திற்கான ஆசையை தியாகம் செய்யாமல் ஆழமான கொள்கை போராட்டம் இல்லாமல் எதிர்க் கட்சியை தோற்கடிக்க போவதில்லை நான் காங்கிரஸ்காரராக இருந்த கட்சி என்னுடனேயே இருந்துள்ளது.  இது தான் என் உயிர்மூச்சு எப்போதும் இப்படித் தான் இருக்க போகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

– கே.பி.சுகுமார்.

 

Leave a Reply