ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விச் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட காக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 25 ஆயிரம் மதிப்பிலான கல்விச் சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர். இன்று காலை நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் காக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த மக்கள் சில்வர் தட்டுகள், சில்வர் குடங்கள், சில்வர் டம்ளர்கள், நாற்காலிகள், குப்பை கூடைகள், தண்ணீர் டிரம், எல்.இ.டி. பல்புகள், பக்கெட்கள், ஜக்குகள், பூட்டுகள், நோட்டுகள், பேனா, பென்சில்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கிராம கோவிலில் இருந்து, மேல தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் பள்ளியில் தலைமையாசிரியர் பால்ராஜ் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் குறிஞ்சி தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ் கிருபாகரன், பேராசிரியர் ரவீந்திரன், டயானா, ரெக்ஸ் ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெற்றது. அப்போது, 5-ஆம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவி கெளதமி என்பரின், 6 ஆம் வகுப்பு முதல் அவர் படிக்க விரும்பும் மேற்படிப்பு வரையிலான கல்வி செலவினை பேராசிரியர் ரவீந்திரன் மற்றும் டயானா ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செந்தில் பிரபு, செளந்திரராஜன், பெருமாள், மணியன் உள்ளிட்ட கிராமத்தினர் பலர் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.

 

வீரர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு, தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்களை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டும்!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றம்!

Leave a Reply