கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தொங்கிய சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர்!

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்க சாவடி அருகே, வயல் காட்டில் உள்ள அரச மரத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவரின் உடலை, துவாக்குடி போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் கைகளை கட்டியது யார்? என்பது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply