இலங்கை கடற்பகுதியில் 20 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை, நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (ஜனவரி 12) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்து, நச்சிகுடா கடற்படை கப்பல் நிறுவனத்திற்கு கொண்டு வந்து, கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் சட்ட நடவடிக்கைக்காக நச்சிகுடா மீன்பிடி இயக்குநர் அலுவலகத்தில் அவர்கள் அனைவரையும் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

 

சூரியூரில் நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு விழாவிற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக விரிவானப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்.

Leave a Reply