ரஜினி மக்கள் மன்றத்தில் திமுக உளவாளிகள்!-நடிகர் ரஜினிகாந்த் தரப்பு பகிரங்கக் குற்றச்சாட்டு!-தேன் கூட்டில் மூக்கை நுழைத்த திமுக முரசொலி சிலந்தி.

நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையும், முரசொலி நாளிதழில் வெளிவந்த நையாண்டி பதிலும்!

முதல்வர் கனவு – மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…!-ரஜினி ரசிகன்.

திமுகவின் முரசொலி நாளிதழில் இன்று ’சிலந்தி’ என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபரொருவர் ‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.. மே.. மே.. ‘ என்ற தலைப்பில் ஒரு புலம்பல் கட்டுரை எழுதியிருக்கிறார்.

முழுக்க முழுக்க அந்தக் கட்டுரை நம் அன்புத்தலைவரின் அறிக்கையை மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது.

தலைவர் அறிக்கை வெளியிட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை எதிர்த்து எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கட்டுரை. மூன்று நாட்களாக ரூம் போட்டு அழுது, புரண்டு யோசித்திருப்பார்கள் போல.

ஏன் அவர்கள் அழுது புரள வேண்டும்? அதற்கான பதில் வேண்டுமானால், அவர்கள் ஏன் தலைவரின் அறிக்கைக்கு எதிராக புலம்ப வேண்டும் என்பதிலேயே இருக்கிறது.

தலைவர் அறிக்கையில் முழுக்க முழுக்க நம் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள், அதில் எடுத்து வரும் ஒழுங்கு நடவடிக்கைகள், எப்படிப்பட்ட அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம் என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.

‘பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகிலேயே விடமாட்டேன்’ என்று மீண்டும் மீண்டும் திட்டவட்டமாகக் கூறிவருகிறார் தலைவர். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே அரசியலில் இருக்கும் ‘சிலந்தி’களுக்கு அது கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்?

’மற்றவர்களைப் போல அரசியல் செய்வதற்கு நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?’ என்றதொரு நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் தலைவர். அராஜக அரசியல் புரிபவர்களுக்கு அது ஆத்திரத்தை எழுப்பத்தானே செய்யும்?

’ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து விட முடியுமா?’ என்று மிக மிகத் தெளிவுடன் தலைவர் எழுப்பியிருக்கும் கேள்வி, தலைவர் அரசியலைப் பற்றி முழுமையாக அறிந்த பிறகே களமிறங்குகிறார் என்று தெளிவாக எடுத்துரைப்பது எதிரிகளுக்கு ஏமாற்றத்தைத்தானே கொடுக்கும்?

திமுகவின் அரசியல் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று.

அவர்களால் வெகுஜனங்கள் செல்வாக்கை முழுமையாகப் பெற முடியாது.

ஏற்கனவே அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ‘ரமணா’ படப்பாணியில் அவர்களுடைய ஆட்களை சில ஆண்டுகளுக்கு முன்னரே உள்நுழைத்து இப்போது அவர்களெல்லாம் திமுகவின் நேரடிக் கட்டுப்பாட்டில் பல்வேறு ஊடகங்களில் செயல்படுகிறார்கள் என்றதொரு பேச்சு ஊடகத்தினர் மத்தியிலேயே வெளிப்படையாகவே எழுந்து வருகிறது.

அது உண்மைதான் என்பது பல்வேறு சமயங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகிறதுதான்.

அதே போலவே ஏனைய அரசியல்கட்சிகளிலும் தங்களுக்கு தோதானவர்களை உள்நுழைத்து வருவது அவர்களின் பாணி என்று அரசியல் வட்டாரத்திலேயும் பரவலான பேச்சு உண்டு.

நம் மக்கள் மன்றத்திலும் அதே போல அவர்களுடைய நபர்களை உள்நுழைக்கத் திட்டமிட்டனர். சற்றே வெற்றியும் பெற்றனர் எனலாம்.

ஆனாலும் நம் அன்புத்தலைவரின் அருகில் அத்தகையோர் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்?

எதிரிகள் பாராமுகம் காட்டினாலும், வலியச் சென்று அன்பு முகம் காட்டும் நம் தலைவர், துரோகிகளை மட்டும் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.

மிகப் பெரிய பதவியில் அமர்த்தப்பட்டாலும் கூட இருந்தே குழி பறிக்க நினைத்த சிலரின் திட்டமிட்ட மோசடிகள் தெரிய வந்து அவர்கள் மன்றத்திலிருந்து விலக்கப்பட்டனர். நீக்கப்பட்டனர்.

அவர்களைப் பற்றி அறிக்கை விட்டால், திமுகவினர் ஏன் குத்துதே, குடையுதே என்று கதற வேண்டும்?

எனில் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் திமுகவால் அனுப்பபட்டவர்களா?

ரஜினி மக்கள் மன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைப் பற்றி முக்கால் பக்கத்திற்கு முரசொலி புலம்புகிறது என்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய்க்கு ஏன் கவலை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவர்களின் ஊடுருவல் திட்டம் வெட்ட வெளிச்சமாக அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல ஆகி விட்டது இந்தப் புலம்பல் கட்டுரை.

திமுக தன்னுடைய கட்சி நாளிதழில் நம்அன்புத்தலைவரை தாக்கி எழுதியிருப்பது நம் காவலர்கள் மத்தியில் கோபத்தையும் அதே சமயத்தில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட ஒரு கட்சி தூய்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் அன்புத்தலைவரை விமர்சிக்கிறார்களே என்ற கோபம் ஒரு புறம். தலைவரைக் கண்டு பயந்து போய் உதறல் எடுத்ததால் தான் தன்னுடைய கட்சி நாளேட்டிலேயே தலைவரை விமர்சித்து ரஜினிக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்ற தோற்றத்தை இவர்களே ஏற்படுத்தி விட்டார்கள் என்பது மற்றொரு பக்கம்.

தூய்மையான, உண்மையான, நேர்மையான அரசியல் என்பதைப் பற்றியெல்லாம் பேச அருகதையற்ற திமுகவினருக்கு அப்படியெல்லாம் பேசிக் கொண்டு உண்மையான உன்னத நோக்கோடு தலைவர் வருவது எரிச்சலை உண்டு பண்ணத்தானே செய்யும்?!

எத்தனை சிலந்திகள் வந்தாலும் எங்கள் அன்புத்தலைவரின் வெற்றியைத் தடுக்க முடியாது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply