காதலனுடன் சுற்றுலா வந்த பெண்ணை, கடத்தி மிரட்டி கற்பழித்த ஆட்டோ ஓட்டுனர்!-ஏற்காட்டில் நடந்த விபரீதம்.

கார் ஓட்டுனர் குமார் (எ) ஆரோக்கியதாஸ்

ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர், தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். வாசு தேவன் மது அருந்தியுள்ளார். பின் இருவருக்கும் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக, காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு வந்துள்ளார். அவரை பின்தொடரந்து வாசுதேவன் வந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் நாச்சான் (எ) விஜயக்குமார்.

அங்கிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதவன் மகன் நாச்சான் (எ) விஜயக்குமார்(வயது37), மற்றும் கார் ஓட்டுனர் லூக்காஸ் மகன் குமார் (எ) ஆரோக்கியதாஸ் (வயது 32) இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என விசாரித்து, அங்கு வந்த வாசுதேவனை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். மேலும், அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர்.

பின்னர், நாச்சான் மற்றும் குமார் ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி, அவரை அழைத்து சென்றுள்ளனர். குமார் வழியிலேயே இறங்கி விட்டான். நாச்சான், தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு பெண்ணை அழைத்து சென்று கற்பழித்துள்ளார். பின்னர் இன்று அதிகாலை 1.45-க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு ஏற்காடு வந்துள்ளார்.

இந்நிலையில், வாசுதேவன் இன்று காலை ஏற்காடு காவல் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த நாச்சான் மற்றும் குமார் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

இன்று மாலை சேலம் ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்ய நாரயணன், ஏற்காடு காவல் நிலையம் வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்ட, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜாகீரா, இந்திய தண்டணைச் சட்டம் 341- கடத்தல், 324-காயம் உண்டாக்குதல், 392-வழிப்பறி, 506(1)-மிரட்டல், 376-வன்புணர்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் (FIR NO: 6/2018) வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளார். இதில் நாச்சான் மீது கடத்தல் மிரட்டல் கற்பழிப்பு மற்றும் வழிப்பறி வழக்கும், குமார் மீது வழிப்பறி வழக்கும் பதியப்பட்டுள்ளது.

-நவீன்குமார்.

முக்கிய குறிப்பு: பெண்ணின் எதிர்காலம் கருதி, அவரது பெயர் மற்றும் படம் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ஆசிரியர்  &  வெளியீட்டாளர்.

 

Leave a Reply