மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை திருவாரூர். மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ் தத்துவள மையத்திடம் ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை சேலம் லைப் லைன் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் தத்துவள மையத்திடம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ் ஒப்படைத்தார்.

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  23.04.2018 அன்று ஒரு ஆண் குழந்தை பெயர் தெரியாத எவரோ விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் கைவிடப்பட்ட அந்த ஆண் குழந்தை மேல் சிசிக்சைக்காக 30.04.2018 அன்று திருவாரூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு  நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது நல்ல நிலையில் உள்ள ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ள யாரும் இல்லாத நிலையில், கைவிடப்பட்ட ஆண் குழந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி சேலம் லைப் லைன் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் தத்துவள பராமரிப்பு மையத்திடம் ஒப்படைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் (20.06.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ்   கைவிடப்பட்ட ஆண் குழந்தைக்கு சீனிவாசன் என பெயரிட்டு சேலம், லைப் லைன் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் தத்துவள மையத்திடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அழ.மீனாட்சிசுந்தரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,  பெ. செல்வராசு திருவாரூர், குழந்தைகள் நலக்குழு தலைவர், ஆர். ரவிச்சந்தரன் மற்றும் உறுப்பினர்கள்  சாந்தகுமார், உத்திராபதி,  தவசுராணி, நன்னடத்தை அலுவலர், வீ.அருள்தாஸ் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவர் கண்ணன் அரசு அலுவலகர்கள் கலந்துக்கொண்டனர்.

-ஜி. ரவிச்சந்திரன்

Leave a Reply