எர்ணாக்குளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி வட்டம் விளக்குடியை சேர்ந்த கஸ்தூரிமகாலிங்கம் /பெ.கிருஷ்ணசாமி, கஸ்தூரி மாகலிங்கம் தனது தந்தையுடன் 06.02.2018 அன்று  நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் சென்றிருந்தார். அங்கு கஸ்தூரி மாகலிங்கம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது அவரது தந்தை கிருஷ்ணசாமி-க்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதில் கிருஷ்ணசாமி மரணமடைந்தார்.

பின் அன்று மாலை எர்ணாகுளத்திலிருந்து இறப்பு சான்றிதழுடன் கிருஷ்ணசாமியின் உடலைபெற்று கொண்ட அவரின் உறவினர் அன்பரசன் எர்ணாகுளம் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ்  மூலம் திருத்துறைபூண்டி அருகில் உள்ள கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான விளக்குடிக்கு கொண்டுவந்தார். அப்போது கிருஷ்ணசாமியின் உடலை கண்ட அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்த பின் தமிழக அரசின் சார்பாக 06.05.2018  இரவு 2.00  மணியளவில் விளக்குடியில் கிருஷ்ணசாமியின் உடலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து நாகை சட்டமன்ற உறுப்பினர்  தமீமுன் அன்சாரி மற்றும்  வேல்முருகன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று 07.05.2018  காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பொதுமக்கள் பலரும் கிருஷ்ணசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் கனிமொழி எம்.பி.ஜி.ராமகிருஷ்ணன், ஜி.கே. வாசன், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

-ஜி.ரவிசந்திரன், எஸ்.திவ்யா. 

Leave a Reply