காஞ்சிபுரம் மாவட்டம், திரூப்போரூா் வட்டம், கிழக்கு கடற்சாலையில் அமைந்துள்ள கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட 9-வாா்டில் செம்மஞ்சோி குப்பம் உள்ளது. இது மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் “செம்மஞ்சோி குப்பம்” என பெயா் பலகை அமைத்து, திறப்பு விழா செய்துள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்று நினைக்கிறீர்களா?
அதற்கு முக்கிய காரணம், காஞ்சிபுரம் மாவட்ட வரைபடத்தில் கடலோர பகுதியில் உள்ள 30 கிராமங்களின் பெயா்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை மீனவ மக்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து செம்மஞ்சோி மீனவ மக்கள் கூறுகையில், கானத்தூா் ரெட்டிக்குப்பத்திலிருந்து, கடப்பாக்கம் வரை 36 மீனவ கிராமங்கள் உள்ளது. தற்பொழுது 6 கிராமங்களின் பெயா்கள் மட்டுமே காஞ்சிபுரம் மாவட்ட வரைபடத்தில் உள்ளது. மற்ற மீனவ கிராமங்களின் பெயா்கள் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
காலம் காலமாக, கடலோடு ஓட்டி உறவாடி வாழ்ந்து வரும் எங்களை, கடலை விட்டு 500 மீட்டா் தள்ளி போக அரசாங்கம் வற்புறுத்துகிறது. இது நியாமா? இப்படி நாங்கள் தள்ளிப்போனால், தொழில் எப்படி செய்ய முடியும் ? எப்படி வாழ முடியும்? கட்டிய வீடுகளை எப்படி எடுத்து செல்ல மூடியும்? அதிகாாிகளின் இந்த முடிவுக்கு காரணம், தனியாா் ஓட்டல் ரெசாா்ட் பண முதலைகள் தான். அவா்களுக்கு கடலை ஓட்டியுள்ள இடங்கள் திருவான்மையூா் முதல் பாண்டிச்சோி வரை வேண்டும், அதுதான் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் மூலக்காரணம். விடமாட்டோம், மீனவ மக்களுக்கே கடலும் கடல் சாா்ந்த இடமும், அதிவிரைவில் காஞ்சிபுரம் மாவட்ட வரைபடத்தில் எடுக்கப்பட்ட 30 கிராமங்களில் பெயா்கள் மீண்டும் பதிய வேண்டும், சோ்க்கபட வேண்டும். இல்லையெனில், போராட்டங்கள் வெடிக்கும்; கிழக்கு கடற்கரை சாலை போா்களமாக மாறும் என்கின்றனர்.
-ம.சசி.