திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி நாட்டு நல பணித் திட்ட மாணவர்கள் சார்பில் காட்டூர் பாப்பாகுறிச்சியில் 7 நாள்  முகாம் நடைப்பெற்றது!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி நாட்டு நல பணித் திட்ட மாணவர்கள் சார்பில், காட்டூர் பாப்பாகுறிச்சியில் கடந்த 28-ம் தேதி நாட்டு நல பணித் திட்ட அலுவலர் இளங்கோ தலைமையில தொடங்கிய 7 நாள்  முகாம் இன்று நிறைவடைந்தது.

இந்த முகாமில் கலந்து கொண்ட நாட்டு நல பணித் திட்ட மாணவ, மாணவிகள் பாப்பாகுறிச்சியில் உள்ள பொன்னியம்மன் மற்றும் செந்தாளம்மன் கோவில்களில் உலவாரப்பணியை மேற்கொண்டனர். மேலும், திருச்சி மாநகராட்சி தொடக்கபள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், இலவச மருத்துவ முகாம், கால்டை மருத்துவ முகாம், யோகா பயிற்சி, சீமைகருவேல மரங்களை அகற்றுதல், பொது சுகாதாரம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி… உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடைப்பெற்ற முகாமின் நிறைவு நாளான இன்று நடந்த விழாவிற்கு உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழாய்வுதுறை தலைவர் வீரமணி, வணிகவியல்துறை தலைவர் ஜெனட்ராஜகுமாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அரியமங்கலம் கோட்ட மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன், உதவி செயற்பொறியாளா குமரேசன், பாப்பாகுறிச்சி கிராமத்தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் உருமு தனலெட்சமி நாட்டு நல பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாட்டு நல பணித் திட்ட அலுவலர் இளங்கோ வரவேற்றார், நாட்டு நல பணித் திட்ட மாணவ ஒருகிணைப்பாளர் கோகுல் முகாம் அறிக்கையை வாசித்தார். நாட்டு நல பணித் திட்ட அலுவலர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply