உஷா உயிரிழந்த விவகாரம்!- காவல்துறை அதிகாரிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை.

போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று இருசக்கர வாகனத்தைப்  எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற  பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

இச்சம்பவம் தொடர்பாக பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில்  காவல் ஆய்வாளர் காமராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய பிரிவு துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலக்கிருஷ்ணபிரபு இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள கல்லுக்குழி சுற்றுலா மாளிகையில் காவல்துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணையில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி, போக்குவரத்து காவலர்கள் சீராளன், சுரேஷ், சாந்த குமார், சோனா, மாடசாமி, ஹோம் கார்டு பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர்.

-ச.ராஜா.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

 

Leave a Reply