சுற்றுலா வேன் பனை மரத்தின் மீது மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்! -திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த பரிதாபம்.

திருவாரூரிலிருந்து  தஞ்சாவூர் செல்லும் சாலையில் இன்று காலை விஜயவாடாவை சேர்ந்த 25  பயணிகள் சுற்றுலா வேனில் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு, ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த பொழுது, திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில் எதிரே வந்த பயணிகள் பேருந்துக்கு வழிவிட்ட போது, சுற்றுலா வேன் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விஜயவாடாவை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், காயமடைந்த நபர்களை வேனிலிருந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காயமடைந்த பயணிகளை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த பகுதியில் விபத்துக்கள் நடப்பதற்கு நீண்ட வருடங்களாக நெடுஞ்சாலைகள் சீரமைக்க படாததே காரணம் என்று பொதுமக்கள் மற்றும்  வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர், அரசு சாலைகளை சரிபடுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

– ஜி.ரவிச்சந்திரன்.

 

 

One Response

  1. S kumar February 22, 2018 4:21 pm

Leave a Reply