திருச்சி வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3000 மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பாதப் பூஜை!-நெஞ்சை நெகிழவைத்த உண்மை சம்பவம்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  +1 மற்றும் +2 வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வில் வெற்றி பெற  தங்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சவுடாம்பிகா கல்விக் குழுமத்தின் 7   பள்ளிகளைச் சேர்ந்த  3 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பெற்றோரை வணங்கி, அவர்களது பாதங்களுக்குப்  பொட்டு வைத்து விளக்கேற்றி மலர்களால் அர்ச்சித்து பாதபூஜை செய்து ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சி உண்மையிலுமே நெஞ்சை நெகிழவைத்தது.

பாதபூஜையை வித்யாலயா முதல்வர் உஷா துவக்கி வைத்து வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சவுடாம்பிகா கல்விக் குழுமச் சேர்மன் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் செந்தூர்ச்செல்வன் முன்னிலை வகித்தார். அகாடமிக் அறிக்கையை முதன்மை முதல்வர் பகவதியப்பன் வாசித்தார். நிகழ்ச்சியில்,  கல்வி ஆலோசகர் சுமதி, இடைநிலை முதல்வர் விமலா, மேல்நிலை முதல்வர் ராஜா, உதவி தலைமையாசிரியர் மருதாச்சலம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் திரளாகக் கலந்து கொண்டனர், கிராப்பட்டி செல்லம்மாள் பள்ளி முதல்வர் நடராஜன்  நன்றி கூறினார். 

-ஆர்.சிராசுதீன்.

 

 

Leave a Reply