தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!-மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

IMG-20180105-WA0116

????????????? ????????????? ????????????? ??????????????????????????

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்பவர்களும், அவசர நிமித்தமாக வெளியில் செல்ல வேண்டிய பயணிகளும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

?????????????

??????????????????????????இலவச பஸ் பாஸ்  பயன்படுத்தி வந்த ஏழை மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துபோய் உள்ளனர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு  செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகளை இயக்கினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மேலும், தற்காலிக ஓட்டுநர்களுக்கும், வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மோதலை உருவாக்கும். இதனால் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு  பிரச்சனை ஏற்படும். பொதுமக்களின் பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும்.

எனவே, இவ்விசியத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை ஏற்று, பேச்சு வார்த்தையின் மூலம் போர்க்கால அடிப்படையில் சுமூகத் தீர்வு காணவேண்டும். அதுதான் அரசுக்கும் நல்லது; மக்களுக்கும் நல்லது; போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 படங்கள் : எஸ்.ராஜா.

 

Leave a Reply