விஜயபாஸ்கரின் கட்சி பதவி பறிப்பு!

VijayabaskarVB Dismiss-on-2.3தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்சி பதவியை பறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயபாஸ்கர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,  அவருக்குப் பதிலாக பி.கே.வைரமுத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com