பக்தர்களோடு பக்தராக வலம் வரும் மயில்!- யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோயிலில் நடந்த அதிசயம்!

Nallur_Kandasamy

yal nallur kandasamy temple

yal nallur kandasamy temple.jpg1

இலங்கையில் மிகவும் புகழ் பெற்றக் கோயில்களுள் முக்கியமானது நல்லூர் கந்தசுவாமி கோயில். இது இலங்கையின் வடபகுதியிலுள்ள  யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 

12-ம் நூற்றாண்டு தொடக்கம் 17-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக நல்லூர் இருந்தது. யாழ்ப்பாண அரச காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாகவும் இது இருந்தது.

இந்த ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில், பக்தர்களோடு பக்தராக காட்சி கொடுத்து வருகிறது. இது ஆலயத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை பக்தர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

-வினித்.