தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு  ரூ.2 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு!

jjHONBLE-CM-CONGRATS-.A.BHAVANI-DEVI

சி.ஏ.பவானி தேவி.

சி.ஏ.பவானி தேவி.

பெல்ஜியத்தில் நடந்த ஃபிலமிஷ் ஓபன் வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.ஏ.பவானி தேவிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெல்ஜியத்தின் ஜென்ட் நகரில் நடந்த 18-வது ஃபிலமிஷ் ஓபன் வாள் சண்டையில் நீங்கள் வெண்கல பதக்கம் வென்றது கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இதன் மூலம் தமிழகத்தையும், இந்தியாவையும் நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்த சாதனைக்கு தமிழக மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தமிழக அரசு சார்பில் உங்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். நீங்கள் 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக கடினமாக உழைக்க, இது உங்களை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 -ஆர்.அருண்கேசவன்.

 

 

 

பேருந்து நிலை தடுமாறி, லாரி மீது மோதி தீப்பற்றியதில் 42 பேர் பலி! -பிரான்ஸ் நாட்டில் நடந்த பயங்கரம்!
ஏற்காட்டில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 5 பேர் காயம்!